புதிதாக அமையப்பெற்ற Billund நகர சபையின் கீழ், அமையவுள்ள கலாச்சா மற்றும் பொழுதுபோக்கு சபைக்கு (Kultur- og Fritids råd), கிறின்சட் மாலதி தமிழ்க் கலைக்கூடம் சார்பாக திரு. பிரசனாத் ரகுலேஸ்வரன் அவர்கள் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்.
12 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபைக்கான தேர்தல் நேற்று 07.02.2022 காலை 09.00 மணியில் இருந்து 19.00 மணிவரை கிறின்சட்டில் அமைந்துள்ள நகரசபையில் இடம்பெற்றது.
நேற்று இரவு வெளிவந்த தேர்தல் முடிவுகளின்படி 12 உறுப்பினர்களுடன் புதிதாக அமையவுள்ள கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு சபைக்கு, கிறின்சட் மாலதி தமிழ்க் கலைக்கூடம் சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் திரு. பிரசனாத் ரகுலேஸ்வரன் அவர்கள் தெரிவாகியுள்ளார்.
நான்கு வருடங்களுக்கு ஒருமுறை அமையப் பெறும் இச் சபைக்கு, கடந்த 2018 ஆம் ஆண்டும் கிறின்சட் மாலதி தமிழ்க் கலைக்கூடம் சார்பாக உறுப்பினர் தெரிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான திரு. பிரசனாத் அவர்கள் வரி திணைக்களத்தில், அரச நிதி கண்காணிப்பாளராக
பணியாற்றுகின்றார்.
வெற்றி பெற்ற திரு. பிரசனாத் ரகுலேஸ்வரன் அவர்களுக்கு வாழ்துகளை தெரிவிப்பதோடு, அவரது வெற்றிக்கு உதவிய கிறின்சட் மாலதி தமிழ்க் கலைக்கூட நிர்வாகத்தினருக்கும் மற்றும் வாக்களித்த அனைவருக்கும், டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் சிறப்பான நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.