கடந்த சனிக்கிழமை 10/09/22 நடைபெற்ற Swiss தமிழ்க்கல்விச் சேவையினால் நடாத்தப்பட்ட முத்தமிழ் விழாவில்,அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் சிறப்பு நிகழ்வாக பட்டமளிப்பு அமர்வு முன்னெடுக்கப்பட்டது. இம்மவர்வில் பட்டயக்கல்வியை நிறைவு செய்த டென்மார்க், நெதர்லாந்து, இத்தாலி நாடுகளைச் சேர்ந்த கல்விக்கழக ஆசிரியர்களுக்குப் யாழ்- பல்கலைக்கழக தகைசார் பேராசியர் சண்முகதாஸ், பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோரால் இலக்கியப் பட்டயத்திற்கான சான்றிதழ் (Diploma) வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டன. கல்விப்பேராளார்கள், பன்முக ஆளுமை படைத்த தமிழ்ச்சான்றோர்கள், ஆசிரியப் பெருந்தக்கைகள் , பொதுமக்கள் எனப் பல்லாயிரக் கணக்கானோர் தமிழால் இணைந்து கொண்ட பெரும் அரங்கத்தில் எமது மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் ஆசிரியர்களும் கலந்து கொண்டு பட்டயத்தைப் பெற்றுக்கொண்டமை தனித்துவமான சிறப்பாகும்.. இவர்களை அகம் நிறைந்து வாழ்த்துவதில் நாம் பேருவகையும் பெருமிதமும் அடைகின்றோம். மாலதி தமிழ்க் கலைக்கூட ஒன்பது ஆசிரியர்கள் பட்டயத்தேர்வை நிறைவு செய்து தமது ஆசிரிய வாண்மைத்துவத்தை வளப்படுத்தியிருப்பது போற்றுதற்குரியதாகும். இருவர் இந்த மண்ணில் பிறந்து 12 ஆவது வகுப்பை நிறைவுசெய்து இலக்கியப் பட்டயக்கல்வியை முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
● றெமிலிசியா ஹென்றி ஜெயக்குமார்
● விஜிதா இந்திரதாசன்
● ஜீவமணி கலாதரன்
● சிறீறாகினி சிவரூபன்
● புஸ்பலதா நாகேந்திரம்
● பவானி கண்ணதாஸ்
● ஜதுஷா தர்மரட்ணம்
● மனோஜா பூபாலசிங்கம்
● ஜெயக்குமாரி ஜெயபாலன்